கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கினை விசாரணையை 4 வாரங்களில் துவங்க வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாஷேத்ரா நடனப் பள்ளியில் கடந்த 1995-2001 கால கட்டத்தில் படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அந்த மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நான்கு வாரங்களில் விசாரணையை துவங்கும் வேண்டுமென, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.