பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
டெல்லியில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சா்வதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பை அதிகரிப்பதோடு, எல்லை பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த எல்லை பாதுகாப்புப் படைக்கு உத்தரவிட்டாா்.
மேலும், எல்லை கண்காணிப்பில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையுடன் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தினாா்.