தைப்பூசத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் கோயிலில் தரிசனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வருகை தந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் முருகனை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மமுருகி வழிபட்டனர்.