புதுச்சேரியில் இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து முதலமைச்சரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருங்களூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இடுகாட்டிற்கு செல்ல உரிய பாதை அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வரை அங்கு பாதை அமைத்து தரப்படாத நிலையில், சாலையின் நடுவே வைக்கோலை கொளுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி அவ்வழியாக பயணித்த நிலையில், வாகனத்தை மறித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.