சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் கிராபிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதல் பிளை ஓவர் பாலம் ஆன கத்திப்பாரா பாலத்திற்கு மேற்புறத்தில் ஏற்கனவே இரண்டு மெட்ரோ வழித் தடங்கள் செல்கின்றன. மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள 1 மற்றும் 2ஆம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் பாதைக்கு மேலே 30 மீட்டர் உயரத்தில் புதிய மெட்ரோ வழித்தடம் அமையவுள்ளது. இந்த மெட்ரோ வழித்தடம் பொறியியல் கட்டுமான ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது என தெரிவித்துள்ள எல்அண்டி நிறுவனம், புதிய வழித்தடம் தொடர்பான கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.