ஓபிஎஸ் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நில ரத்து - பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவு!
Aug 5, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓபிஎஸ் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நில ரத்து – பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 08:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யும்படி, தமிழ்நாடு மாநில பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், ராஜாகளம் பகுதியில் உள்ள 40 செண்ட் பஞ்சமி நிலம், 1991ஆம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த மூக்கன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது.

அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்ற நிபந்தனையை மீறி, மூக்கன் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பெயரில் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, நிபந்தனையை மீறி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், பஞ்சமி நிலத்தை பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டது.

முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும், மாநில பட்டியலின ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: theniFormer Chief Minister O. PanneerselvamTamil Nadu State Scheduled Castes CommissionPanchami land purchase issue40 cents of Panchami landRajakalam
ShareTweetSendShare
Previous Post

தவெகவில் திருநர் அணியை 9-வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? – செயற்பாட்டாளர் வித்யா கேள்வி!

Next Post

வங்கதேசத்தில் டிசம்பரில் பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies