சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தும் இதுவரை டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறினார். தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் துறையில் நியாயமாக போராடியவர்களை கைது செய்வது தவறான அணுகுமுறை என கூறினார்.
பின்னர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள், முத்தரசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை
போலீசார் கைது செய்தனர்