பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் – மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.
ரூ.550 கோடியில் பாம்பன் கடலில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. கடந்தாண்டு இறுதியில் பணிகள் நிறைவுற்றன. இந்நிலையில் புதிய ரயில்வே பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீனவர்கள் கடல் நடுவே படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்து கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.