தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தவெகவினர் மீது தனியார் பேருந்து மோத முயன்றதால் ஆத்திரமடைந்த தவெகவினர் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 442-வது பிறந்தநாளையொட்டி ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த தவெகவினர் சென்றனர். அப்போது அவ்வழியாக தேனி நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து தவெகவினர் மீது மோதுவது போல வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய தவெகவினர், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.