நகை கண்காட்சி என கூறி 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகை கடை உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.
சென்னை சவுகார்பேட்டையில், மஹிப்பால் ஜெயின், ஜிதேந்திரா ஜெயின், மனோஜ் குமார், சங்கேஷ் கோத்தாரி, ராஜீவ் மேத்தா ஆகியோர் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த நகைக்கடை நடத்தி வரும் சகோதரர்களான முகேஷ், மோனீஷ், சுனில் ஆகியோர் மும்பையில் நகை கண்காட்சி நடைபெற உள்ளதாக கூறி 8 கோடி மதிப்புள்ள நகைகளை பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு மாதம் கடந்த பிறகும் நகைக்கான பணத்தை வழங்காததால் அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது