நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பந்திப்பூர் சாலையில் காய்கறி ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்து காய்கறிகளை சூறையாடிய காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றைக்காட்டு யானை சாலையில் நடமாடி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி ஏற்றி வந்த மினி பிக்கப் லாரியை காட்டு யானை வழிமறித்து நின்றது.
அப்போது யானையிடமிருந்து தப்பிக்க ஓட்டுநர் வாகனத்தை இயக்க முயற்சித்தும், வாகனத்தை அப்பகுதியில் இருந்து செல்ல விடாமல் தடுத்து வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகள் அனைத்தையும் தும்பிக்கையால் கீழே இழுத்து தள்ளி காய்கறிகளை சூறையாடியது.
இதனால் சாலையின் இருப்புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்ட நீண்ட நேரமாக முயற்சித்தனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.