அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடரப்க 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
.இதனிடையே புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் அதிமுக உறுப்பினர் அல்லாத சூரியமூர்த்தி எவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் வாதிட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், ஜி அருள்முருகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கிட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.