ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்திகடவு – அவினாசி திட்ட குழு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட 4 பேர் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.