பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு புறப்படும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது.
தகவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மும்பை போலீசார், மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து விசாரணை தொடங்கினர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை செம்பூர் பகுதியில் கைது செய்துள்ளதாகவும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.