ஆந்திராவில் பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் சாதனைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்க ஆந்திர அரசு முனைப்பாக உள்ளதாக கூறியுள்ள அவர், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐ.டி. நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.