சென்னை முகப்பேரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மைதிலி என்பவர் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவரது மகள் ரித்திகா, அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் ஷ்யாம் கண்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காலதாமதமாக வந்த ரித்திகாவிடம் அவரது தாய் மைதிலி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஷ்யாம் கண்ணன் அவருடன் சண்டையிட்டு கழுத்தை நெறித்ததாக கூறப்படுகிறது.
இதில் மயக்கமடைந்த மைதிலி உயிரிழந்த நிலையில், ஷ்யாம் கண்ணனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.