சுவாமி தயானந்த சரஸ்வதி சுதந்திர இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு ஆற்றியதாய மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூடடியுள்ளார்.
மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த நாள் தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆரிய சமாஜத்தின் நிறுவனர் என்ற முறையில், வேத இந்து மதத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், குழந்தை திருமணத்தை எதிர்ப்பு, விதவை மறுமணத்தை ஊக்குவிப்பதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பூர்வீக பொருட்களைப் பயன்படுத்தும் நடைமுறையை முதன்முதலில் புகுத்தியவர் மற்றும் அந்நிய ஆட்சியைக் கண்டித்தவர் என்றும், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், துறவி, கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி குரு ரவிதாஸை அவரது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் செய்தியைப் பரப்புவதற்கான அவரது அழியாத பணியை நாடு நினைவுகூர்கிறது என்றும், அவரது போதனைகள் சாதி பாகுபாட்டைக் கடக்க எண்ணற்ற வழிகளை ஊக்குவித்துள்ளன என்றும் கூறியுள்ளார். இரக்கம், பணிவு மற்றும் நீதியின் மதிப்புகளில் நிறுவப்பட்ட பல சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு ஊக்கமளித்துள்ளன என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளன.