விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சரக்கு லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
சிவகாசி சீதக்காதி நடுத்தெருவில் தனியார் மறுசுழற்சி காகித கழிவு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்கு சொந்தமான சரக்கு லாரியில் இருந்த அலுமினிய கோட்டிங் கழிவு பேப்பர்களில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் லாரி மீது தண்ணீரை விசிறியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.