விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக பொய் புகார் கூறிய காவல் பெண் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரணிதா, கடந்த 5ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தன்னை தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
மேலும், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், காவல் நிலைய சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்த காவல் அதிகாரிகள், மருத்துவர்களிடமும் விசாரணை நடத்திய நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.