செயற்கை நுண்ணறிவில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதுடன், அதனை பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சுந்தர் பிச்சை, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா செயற்கை நுண்ணறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது.
பொது நலனுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. நமது இளைஞர் சக்தி மீது நம்பிக்கை வைத்து, உலகம் நம் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு கேட்டுக்கொள்கிறோம்!” என தெரிவித்துள்ளார்.