திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.
பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த 20 பேர் சென்னையில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரியபாளையம் அருகே சென்றபோது அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.