நடிகர் சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சமீபத்தில், பிரம்மானந்தம் நடித்த `பிரம்மா ஆனந்தம்` படத்தின் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது, ராம் சரணின் மகள் கிளிங்காரா குறித்து பேசப்பட்டது.
அப்போது சிரஞ்சீவி, வீட்டில் எல்லாம் பெண்களாக இருக்கிறார்கள் என்றும், சில சமயங்களில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால், சிரஞ்சீவியின் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.