இன்று தமிழகம் வரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.
தொடர்ந்து தமிழகத்தில் சனாதன ஒருங்கிணைப்பு பயணம் என்ற பெயரில் அறுபடை வீடுகளில் தரிசனம் மேற்கொள்கிறார்.
அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தஞ்சை சுவாமிமலை வருகை தரும் பவன் கல்யாண் அடுத்ததாக திருச்செந்தூர், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், மருதமலை, பழனி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார்.