மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ல் ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மாசி மாதத்தை முன்னிட்ட மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
கோயில் மேல் தந்திரி கண்டரர், ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் காண்பித்தார்.
இன்று அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். தொடர்ந்து வரும் 17ஆம் தேதி வரையிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.