கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விலை உயர்ந்த செல்போன் தொலைந்த விவகாரத்தில் கணவர் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த அம்மு என்பவர், உறவினர் திருமணத்திற்கு சென்றபோது தனது விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை தொலைத்துள்ளார். இது குறித்து ஓமன் நாட்டில் பணிபுரியும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, செல்போன் தொலைத்த மனைவியை கணவர் மூர்த்தி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அம்மு, 2 குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.