கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைத்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக யுஜிசி உறுப்பினர் சசிகலா வாஞ்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசின் பிரதிநியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் பி.தனபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அவரது வலியுறுத்தலை தமிழக அரசு தற்போது மீண்டும் புறக்கணித்துள்ளது.