வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை அவை ’கூடியதும், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேதா விஷ்ராம் குல்கர்னி அறிக்கையை தாக்கல் செய்தார். வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 குறித்த குழுவின் முன் வழங்கப்பட்ட சாட்சியப் பதிவின் நகலையும் அவர் தாக்கல் செய்தார்.
இதேபோல் மக்களவை தலைவர் ஒம் பிர்லாவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன