சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி பகுதியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பட்டி சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி இந்திராவுக்கு தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்த பாலகிருஷ்ணன், அதிகாலை மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மேலும், தனது குடும்ப பிரச்னைக்கு காரணமாக கலா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி தப்பியோடிய பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.