கும்பகோணத்தில் இளைஞர்களுக்கு இடையே தேசபக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஏராளமான மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பாடல்கள் பாடப்பட்ட நிலையில், பார்வையாளர்கள் அவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.