உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றால் பலருக்கும் காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
செய்தி மற்றும் கலாச்சாரம் முதல் இசை மற்றும் கதை சொல்லல் வரை, படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இது விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
வானொலி உலகத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்காக உங்கள் கருத்துக்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.