கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த பொன்மாறன் என்ற 5 வயது சிறுவன், கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு வரும்போது சிறுவன் நல்ல உடல் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்கேன் எடுக்க சென்றபோது சிறுவனுக்கு ஊசி போடப்படவே, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
சிறுவன் உயிரிழந்ததை மறைப்பதற்காக வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.