தென்காசி அருகே பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கில் கணவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இலத்தூர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். அதில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிவகாசியை சேர்ந்த கமலி என்றும், குடும்ப தகராறில் கமலியை அவரது கணவர் ஜான் கில்பர்ட் இரும்பு கம்பியால் அடித்து கொன்றதும் தெரியவந்தது.
மேலும், கமலியின் சடலத்தை தனது நண்பரின் காரில் வைத்து குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தும் விசாரணையில் தெரியவந்தது. கடைசியில், இலத்தூர் குளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கமலியின் உடலை எரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கணவர் ஜான் கில்பர்ட் மற்றும் அவரது சகோதரர் தங்க திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.