ஐதராபாத்தில் கோயிலுக்குள் இறைச்சி துண்டு கிடந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பூனை ஒன்று கோயிலுக்குள் இறைச்சியை வைத்துச்சென்றது தெரியவந்துள்ளது.
தப்பச்சபுத்ரா பகுதியில் ஹனுமான் கோயில் உள்ள நிலையில், அங்குள்ள சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு கிடந்தது. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பூனை ஒன்று இறைச்சியை கோயிலுக்குள் எடுத்துச்செலவது தெரியவந்த நிலையில், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர்.