சிவகங்கை அருகே உள்ள ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால்100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படுவதுடன், வரி வகைகளும் உயரும் வாய்ப்புள்ளதால் தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், வாணியங்குடி ஊராட்சியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மக்களைச் சந்திப்பதை தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனால் அதிருப்திக்குள்ளான கிராம மக்கள், தஞ்சை-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.