சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
Oct 4, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அவர் அளித்த பேட்டியில்,

பஞ்சமி நிலம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஓபிஎஸ்,

தேனி அல்லிநகரத்தில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரின் பூர்விக நிலம் எந்தவித வகைபடுத்தாமல் இருந்தது, பின் 1984 ஆம் ஆண்டு நிலம் உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்புராஜ் என்பவரிடம் இருந்து நான் நிலத்தை வாங்கினேன். பின்னர் அது பஞ்சமி நிலம் என்று தெரிய வந்ததால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்து விட்டேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக இயக்கத்தை உருவாக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைகள் படி தேர்தல் மூலமாக தான் பொதுசெயலாளர் தேர்வு செய்ய முடியும், இந்த விதி யாராலும் திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியை திருத்தம் செய்தார்.

அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது.

மேலும் பேசிய அவர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க தாமதப்படுத்தியதால் மாநில அரசின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன்னிலையில் நின்று நடத்தியுள்ளோம், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான் என தெரிவித்தார்.

நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால் தான் அனைவருக்கும் நல்லது என தெரிவித்தார்.

த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: ADMKOPSO Pannirselvamtamil nadu newssasikalaT.T.V. Everyone including Dhinakaran is ready to join AIADMK unconditionally: O. Panneerselvam interview!
ShareTweetSendShare
Previous Post

அதிமுக உட்கட்சி விவகாரம் – ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!

Next Post

மக்களவை மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைப்பு!

Related News

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies