சிவகங்கையில் மாணவனின் கையை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவர் புதிதாக புல்லட் வாகனம் வாங்கியுள்ளார். இவரது உறவினரான அய்யாசாமி என்ற இளைஞர், கல்லூரிக்கு அந்த புல்லட் வாகனத்தை எடுத்துச்சென்றுள்ளார்.
கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது அய்யாசாமியை வழிமறித்த 3 இளைஞர்கள், சாதியை சுட்டிக்காட்டி, புல்லட் வாகனம் ஓட்ட எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அய்யாசாமியின் கைகளை வெட்டிய இளைஞர்கள், அவரது வீட்டையும் சூறையாடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அய்யாசாமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கைகளை வெட்டிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.