கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணியிடை நீக்கம் செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை கண்டித்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியை புறக்கணித்து வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.