கரூரில் கிரஷர் நிறுவனங்கள் போக்குவரத்து அனுமதி சீட்டு வழங்காததை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் இயங்கி வரும் கிரஷர் நிறுவனங்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு போக்குவரத்து அனுமதிச்சீட்டு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே லாரிகளில் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள், போக்குவரத்து அனுமதிச்சீட்டு வைத்திறாத லாரி ஓட்டுநர்களை கைது செய்து வருகின்றனர்.
இதனால் பாதிப்படைந்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அனுமதி சீட்டு வழங்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டுள்ளனர்.