நாகையில் அகத்தீஸ்வரர் கோயில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை, அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் குளத்தில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. மேலும், ஆகாய தாமரை செடிகள் குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கோயில் குளத்தை முறையாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.