தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மாவட்ட தலைவர்கள் நியமனம், பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனம் என அடுத்தடுத்து நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி தவெக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விழாவை பிரமாண்டமாக நடத்த தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டுள்ளதாகவும், விஜய் விருது வழங்கிய ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.