தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலைகள் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற உறுதுணையாக இருந்தது பிரதமர் மோடியின் அரசு என கூறினார்.
அப்போது எதிர்கட்சிகள் பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டதால், மனதை திடப்படுத்திக்கொண்டு, தான் சொல்வதை கேட்டு, தமிழகத்தில் சென்று பேசுங்கள் என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் 4,100 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தையும் சுட்டிக்காட்டினார்.
“உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் புதிய விமான நிலையம், “பாரத் மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 பசுமைத் திட்டங்கள்யும் அவர் குறிப்பிட்டார்.
“சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு , தமிழகத்தில் PM ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 12 லட்சம் வீடுகள் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.