மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயிலை இடித்தபோது, ஒருவர் பலியான சம்பவம், திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் பேட்டியளித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அரசியல் தலைவராக பங்கேற்கவில்லை, இந்துவாக பங்கேற்றேன் என தெரிவித்தார்.
தன் மீது இதுவரை எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.