தேனி அருகே சுற்றுலா பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த 40 பேர் சுற்றுலா பேருந்தில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து கர்நாடகா பதிவெண் கொண்ட டெம்போ வேன் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், தேனி மாவட்டம் மதுராபுரி அருகே அதிவேகமாக வந்த டெம்பே வேன், கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணித்த ஓசூரை சேர்ந்த 7 வயது சிறுவன் கணேஷ் மற்றும் நாகராஜ், சூர்யா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.,,,