கோவையில், கல்லூரி மாணவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி, 3 வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, கண்ணப்பன் நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் சத்திய நாராயணன், கடந்த ஞாயிற்றுக்கிழமை முருகன் நகரில் உள்ள வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, சாலையை கடக்க முயன்ற 3 வயது குழந்தை மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தை, அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குழந்தை மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.