தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தனியார் தங்கும் விடுதிகள் தொழிற்சாலைகள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.
அதே போல தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து தொழில்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதற்கான சட்ட விதிகள் அமலில் உள்ள நிலையில் கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எனவே வணிகர்கள் பெயர் பலகையில் தமிழுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்ற அவர், வணிகர்கள் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பேருந்துகளில் எழுதபட்டுள்ள திருக்குறள் எழுத்துத்துக்கள் அழிந்துள்ளதை கவனத்தில் கொண்டு போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லபட்டு அது போன்று அழிந்துள்ள திருகுறள் முழுமையாக எழுத நடவடிக்கை எடுக்கப்படும என்றும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.