தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நடிகராக வலம் வந்த விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி சார்பில் அவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வார் என்பதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு தமிழகத்தில் மட்டுமே விஜய்க்கு வழங்கப்பட உள்ளது.