2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.