அம்மாவாக தான் நடித்த கதாபாத்திரததை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பயந்த தாக நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் நடிப்பில் தற்போது வெளியான ‘சங்கராந்திகி வாஸ்துனம்’ எனும் தெலுங்கு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி சவுத்ரி, லக்கி பாஸ்கர் படத்தில் அம்மாவாக நடிப்பது தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், மக்கள் தன்னை ஒரு அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பயந்து கவலைப்பட்டதாகவும் கூறினார்.