புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மூன்று பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில், 2 பேர் வெட்டு காயங்களுடன உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் கிடந்த மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
பலியான மூன்று பேரில் ஒருவர் ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக டிஐஜி சத்தியம் சுந்தரம் சோதனை மேற்கொண்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.