திருச்செந்தூர் அருகே தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில், மாணவர்களுக்கு பல்லி விழுந்த உணவை வழங்கிய சமையலர்கள் மற்றும் வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனப்பாடு பகுதியில் செயல்படும் தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் 8 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்தாரங்கன் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அப்போது, பல்லி விழுந்தது குறித்து கூறியதால், வார்டன் செண்பகராஜ் மற்றும் சமையலர்கள் முருகேசன், சிந்துராஜ் ஆகிய மூவரும் தங்களை தகாத வார்தைகளால் திட்டியதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தாரங்கன், மாணவர்கள் நலனில் தமிழக அரசு அக்கறை இன்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.